பரிசுத்த தேவ தேவா
பரமே என் ஜீவ நாதா
அழகான உன் முகம் போதுமே
இருள் கூட ஒளியாய் மாறிடுமே
இருள் சூழ்ந்திடும் இந்த பூமியில்
என்னோட வழித்துணை நீதானே
சரணம் - 01
பாரங்களால் நான் தளர்ந்திடும் வேளையிலே
என்னோடு நின்று என்னை காக்கணுமே
ஒரு வாக்கு தந்து என்னை மீட்டு
உன்னோடு என்னை சேர்க்கணுமே
அழகான உன் முகம் போதுமே
இருள் கூட ஒளியாய் மாறிடுமே
சரணம் – 02
என் நோய்களால் நான் துவன்டிடும் வேளையிலே
மருத்துவராய் வந்து சுகம் தந்து காக்கணுமே
என் நோய்கள் போக்கி குணம் தந்தார் இயேசு
என்று சொல்லி அகமகிழ்வேன்
இருள் சூழ்ந்திடும் இந்த பூமியில்
என்னோட வழித்துணை நீதானே
சரணம் – 03
தடைகள் தாண்டும் வாழ்க்கை பயணத்திலே
சந்தோஷம் தந்திடும் சர்வ வல்லவரே
இந்த உலகம் தராத நிலையான மகிழ்ச்சி
என்னுள் தந்தவர் நீர்தானே (OR)
இந்த பூமியில் வராத அமைதி
எனக்காய் தந்தவர் நீர்தானே
அழகான உன் முகம் போதுமே
இருள் கூட ஒளியாய் மாறிடுமே
சரணம் – 04
வேகமாய் வந்து என் ஆவி ஏற்கணுமே
வானத்தின் மீதேறி என்னை பார்க்கணுமே
என் வீட்டில் வந்து என்னோடு தங்கி
உயிரின் உணவை ஏற்கணுமே
இருள் சூழ்ந்திடும் இந்த பூமியில்
என்னோட வழித்துணை நீதானே